காஞ்சீபுரம் மாவட்டம் ராஜாஜி மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் கடையை சுற்றியுள்ள பெட்டி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மதுப்ப்ரியர்கள் இந்த பிளாஸ்டிக் டம்ளர்களை பயன்படுத்திவிட்டு சாலையிலேயே வீசி சென்று விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் பிளாஸ்டிக் டம்ளர்கள் குப்பைக் குவியலாக காணப்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா?