காஞ்சீபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. இந்த சாலையில் தினமும் சென்று வரும் வாகன ஓட்டிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். ஏற்கனவே இந்த சாலையை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. சாலை பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க வழி செய்ய வேண்டும்.