சென்னை அமைந்தகரை அய்யாவு காலனி, விநாயகர் கோவில் தெருவில் குப்பைகள் நிரம்பி வருகின்றன. ஒரு இடத்தில் கொட்டப்படும் குப்பைகள் காற்றில் பறந்து தெரு முழுவதும் பரவி கிடக்கிறது. இதனால் குடியிருப்பு பகுதியானது குப்பைகள் கொட்டப்படும் பகுதியாக மாறிவிட்டது. இதை மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கொரிக்கை வைத்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?