திருவான்மியூர் லட்சுமிபுரம் காமராஜர் சாலையில் (சர்க்கரை அம்மன் கோவில் எதிர்புறம்) உள்ள பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் வெளியேறி வருகிறது. இப்படி வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி வருவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்றுக்கும் வழி வகுக்கிறது. கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினையை உடனடியாக சரி செய்ய வேண்டும்.