காஞ்சீபுரம் மாவட்டம் தாட்டித்தோப்பு வரதராஜா குடியிருப்பு பகுதியில் உள்ள மின் கம்பம் அபாயகரமாக காட்சியளிக்கிறது. இந்த மின் கம்பத்தை ஒட்டி மரம் ஒன்று வளர்ந்து வருகிறது. இதன் கிளைகள் மின் கம்பத்தை உரசி செல்வதால் அசம்பாவிதம் ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது. எனவே மின்சார வாரியம் ஆய்வு செய்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.