திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு கனக்கம்மாசத்திரம் நெடுஞ்சாலையில் இருந்து இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியம் தக்கோலம் நெடுஞ்சாலைக்கு செல்வதற்கு சாலையானது ஆபத்து நிறைந்ததாக உள்ளது. திருவாலங்காடு ரெயில்வே கேட்டில் இருந்து 5 கிமீ சுற்றளவில் உள்ள பகுதிகள் ஆக்கிரமிப்புக்குள்ளாகியும் பராமரிக்கப்படாமலும் உள்ளது. இதனால் அடிக்கடி இந்த பகுதியில் ஏற்படும் விபத்துகளால் உயிர்சேதமும் உண்டாகிறது. இது தொடர்பாக உடனடி நடவடிக்கை தேவை.