காத்திருக்கும் விவசாயிகள்

Update: 2022-09-25 15:01 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவலாங்காடு பகுதியில் உள்ள பெரியகளக்காட்டுர், ஜே.எஸ் .ராமாபுரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் இல்லை. இதனால் விவசாய கடன், மற்றும் சாதி, வருமானம், இருப்பிடம் போன்ற சான்றிதழ்கள் வாங்க பெரியகளக்காட்டூர் வரை செல்ல வேண்டியுள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி எங்கள் ஊரில் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்