திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கோவில் பதாகை கிராமத்தில் ஜோசப் நகர், பிரான்சிஸ் நகர், கிரிஸ்ட் காலனி ஆகிய பகுதிகள் உள்ளன. மேற்கூறிய பகுதிகளில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையில் பயணம் செய்தாலே வாகனங்கள் பழுதாகி விடுகிறது. மேலும் இந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள். எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைக்க வழி செய்ய வேண்டும்.