சென்னை கீழ்பாக்கம் முத்துச்சோலை தெரு மற்றும் வீரராகவன் தெரு சந்திப்பிலுள்ள மின் இணைப்பு பெட்டி பழுதடைந்திருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மின்சார வாரியத்தின் துரித நடவடிக்கையால் புதிய மின் இணைப்பு பெட்டி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த மின்சார வாரியத்துக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பாராட்டை தெரிவித்தனர்.