செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஆமூர் கிராமத்தில் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் கடந்த 3 ஆண்டுகளாக எரியாமல் உள்ளது. இதனால் வேலை முடிந்து இரவு ஊர் திரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே பழுதடைந்த மின் விளக்குகளை சரி செய்ய மின்சார வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.