காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த பட்டூர் காயிதே மில்லத் நகரின் 2-வது தெருவில் உள்ள மின் கம்பம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. மின்கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் ஆபத்தான் நிலையில் உள்ளது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்.