செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த அடையாளச்சேரி ஊராட்சி கிழக்கு கடற்கரைச் சாலையில் 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பாலத்தின் இருபுறமும் தடுப்புத் தூண்கள் உடைந்து காணப்படுகிறது. இரவில் இந்த சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. அபாயகரமான சூழலில் தான் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் பயணம் செய்து வருகிறார்கள். பாலத்தில் மீண்டும் தடுப்பு தூண்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?