சின்ன காஞ்சீபுரம் பெரியார் நகர் கோவிந்தராஜன் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இப்படி கொட்டப்படும் குப்பைகள் அங்கேயே எரிக்கப்படுகின்றன. இதனால் அந்த பகுதியானது சுகாதார சீர்கேட்டுக்கு வழிவக்குகிறது. அந்த இடத்தின் அருகிலேயே ரேஷன் கடை இருப்பதால் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வரும் மக்களுக்கு சவாச கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கு வழி வகுக்கின்றன. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா?