இருள் நிறைந்த மேம்பாலம்

Update: 2022-09-24 13:39 GMT

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியையும் பாஷிகாபுரம் கிராமத்தையும் இணைக்கும் வகையில் கொசஸ்த்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த மேம்பாலத்தில் உள்ள விளக்குகள் இரவு நேரத்தில் எரிவதே இல்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த மேம்பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. எனவே மேம்பாலத்தில் உள்ள விளக்குகளை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்