காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பாலாண்டீஸ்வரர் கோவில் தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாகி கொண்டே வருகிறது. தினமும் இரவு வேளையில் சாலையில் பயணம் செய்யும் மக்களை துரத்துவதும், நாய்களுக்கும் சண்டைகள் நடப்பதும் அன்றாடம் நடக்கிறது. எனவே நாய்கள் தொல்லையிலிருந்து இந்த தெரு விடுபட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
