காஞ்சீபுரம் மாவட்டம் பூந்தமல்லி டிரன்க் ரோடு, தனியார் மருத்துவக்கல்லூரி செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். சாலையில் திரும்பும் இடத்தில் இருக்கும் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி விடுவதால் மழைகாலத்தில் சாலை இன்னும் மோசமாக மாறி வருகிறது. எனவே சாலையை சரி செய்து சீரான போக்குவரத்துக்கு வழி செய்ய வேண்டும்.