சென்னை அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ.காலனி,பசும்பொன் தெருவில் உள்ள சாலைகளின் இருபுறமும் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு மலை போல் காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பைகளில் இருந்து துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் தேங்கிகிடக்கும் குப்பைகள் தீடீரென தீப்பிடிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டு கொள்கிறோம்.