திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் கிராமம் , தோட்டக்காரத்தெரு ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்ரமிப்பு செய்து, சுற்றுச்சுவர்கள் எழுப்பி விட்டனர். இதனால் அங்கிருந்த மிகப் பெரிய மழைநீர் கால்வாய் 3 வருடங்களாகவே காணவில்லை.இதனால் மழைகாலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் வீடுகளுக்கு முன் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.