மழைநீர் கால்வாய் வேண்டும்

Update: 2022-09-23 14:36 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, அத்திமாஞ்சேரி பேட்டை கிராமத்தில், ஆர்.கே. பேட்டை-பள்ளிப்பட்டு இடையே 520 மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் அத்திமாஞ்சேரி கிராமத்தின் குறுக்கு சாலை அருகே வரும்பொழுது 15 மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால்வாய் அமைக்காமல் விடப்பட்டுள்ளது. இதனால் இந்த மழை நீர் வடிகால்வாய் ஒரே கால்வாயாக அமையாமல் இரு கால்வாயாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இரண்டு பிரிவாக உள்ள மழை நீர் வடிகாலை ஒரே கால்வாயாக அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறன்.

மேலும் செய்திகள்