திருவள்ளூர் மாவட்டம் பெரியகளக்காட்டூர் ஊராட்சியில் உள்ள சின்னகளக்காட்டுர் கிராமத்தில் பல ஆண்டுகளாக பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு 'மொபைல் ஷாப்' என்ற முறையில் அரசு அறிவிப்பு கொடுத்த பின்பு மாதம் இருமுறை ரேஷன் பொருட்களை வண்டியில் வைத்து வழங்கப்படுகிறது. 2 நாட்கள் மட்டும் கொடுப்பதால் எங்களுக்கு பொருட்கள் 2 நாட்களுக்குள் வாங்க முடியவில்லை. எனவே எங்கள் பகுதியில் மீண்டும் ரேஷன் கடை செயல்பட வேண்டுகிறோம்.