திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலை பகுதியில் சி.எஸ்.ஐ தேவாலயம் அருகே மின்விளக்குகள் இல்லை. இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. விரைவாக செல்லும் வாகனங்களால், மக்கள் சாலையை கடக்கவும் அச்சப்படுகின்றனர். தொடர்ந்து அதிகரிக்கும் விபத்துகளை தடுக்க அப்பகுதியில் மின்விளக்குகள் அமைந்தால் பயனுள்ளதாக இருக்கும். தீர்வு காணப்படுமா?