குரங்கு தொல்லை

Update: 2022-09-22 14:37 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் காலவாக்கம் அருகில் உள்ள சின்ன களக்காடி பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது . வீட்டிற்குள் குரங்குகள் புகுந்து உணவுப் பொருட்களை எடுத்து சென்று விடுகின்றன. மேலும் அப்பகுதியில் மக்களை அவ்வப்போது தாக்கியும் வருகின்றன. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்