செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஒன்றியம் கூவத்தூர் - மதுராந்தகம் செல்லும் சாலை குறுகலான சாலையாக உள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு கனரக வாகனங்கள் வந்தால் மேற்கொண்டு செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது. சில நேரங்களில் கனரக வாகனங்கள் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்துவிடும் அபாயமும் உள்ளது. எனவே சாலையை விரிவுபடுத்த சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.