செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இருந்து ஆதனூர் செல்லும் மேம்பாலத்தில் உள்ள சாலையின் நடுவில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு மற்றும் பகல் நேரத்தில் இந்த பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.