காஞ்சீபுரம் மாவட்டம் கோவூர் வழியாக போரூர் செல்லும் ஆபத்து நிறைந்ததாக உள்ளது. இந்த சாலையில் பள்ளி, மருத்துவ கல்லூரி போன்ற முக்கியமான கட்டிடங்கள் உள்ளன. ஆனாலும் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. பள்ளி குழந்தைகள் இந்த சாலையில் சென்று வருவதால் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த சாலையில் தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டுகிறோம்.