மாமிச கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2022-09-20 14:57 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த குமணன்சாவடி பஸ் நிறுத்தத்திலிருந்து தனியார் பல் மருத்துவமனை செல்லும் சாலையில் குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. குப்பைகளோடு மாமிச கழிவுகளும் கலந்து இருப்பதால் அந்த பகுதியை கடந்து சென்றாலே துர்நாற்றம் குடலை புரட்டுகிறது. நோய் தொற்று ஏற்படும் முன்பு சமப்ந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தேங்கி இருக்கும் மாமிச கழிவுகளை அகற்ற வெண்டும்.

மேலும் செய்திகள்