நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-09-20 14:55 GMT

கோடம்பாக்கம் ஆர்காட் சாலையில் உள்ள தனியார் மொபைல் கடை எதிரே மின் இணைப்பு பெட்டி ஒன்று உள்ளது. மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக இந்த மின் இணைப்பு பெட்டியின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தற்போது மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி முடிந்துவிட்டது. ஆனால் இந்த மின் இணைப்பு பெட்டிக்கு இன்னும் மின்சார இணைப்பு தரப்படவில்லை. வயர்கள் சாலையில் விழுந்து கிடக்கிறது. இது தொடர்பாக மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்