சென்னை கீழ்பாக்கம் முத்துச்சோலை தெருவும் வீர்ராகவன் தெருவும் சந்திக்கும் இடத்தில் பழுதடைந்த மின் இணைப்பு பெட்டி உள்ளது. இந்த மின் இணைப்பு பெட்டியை சரி செய்வதற்காக புதிய மின் இணைப்பு பெட்டி கொண்டுவரப்பட்டது. ஆனால் புதிய மின் இணைப்பு பெட்டி கொண்டு வரப்பட்டு 6 மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் பிரச்சினை முடிந்தபாடில்லை. பழைய பெட்டி பழுதடைந்துவிட்டது, புதிய மின் இணைப்பு பெட்டி பழுதடைய காத்திருக்கிறது.