திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஜே.பி. எஸ்டேட் 24 வது தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தாக காட்சி தருகிறது. இந்த மின்கம்பத்தில் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும் கம்பிகல் வெளியே தெரிந்தும் காணப்படுகிறது. மின்கம்பம் முழுவதும் செல்லரிக்கும் முன்பு மின்கம்பத்தை சீரமைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.