திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி திருவலங்காடுபகுதியில் உள்ள சின்னகளக்காட்டூர், பெரியகளக்காட்டூர், ஜே.எஸ் ராமாபுரம் ஆகிய மூன்று கிராமங்களிலும் மற்றும் ஒரத்தூர், பாடசாலை ஆகிய ஊராட்சியையும் சேர்த்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு காய்ச்சல் , பிரசவம் , விபத்து ஏற்பட்டால் சுமார் 8 கிலோ மீட்டர் வரை பயணம் செய்து திருவாலங்காடு துணை சுகாதார நிலையம் சென்று தான் முதலுதவி பார்க்க வேண்டிய சூழல் இருக்கிறது. எனவே எங்கள் பகுதியில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.