சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மாதவரம் வி. எஸ்.மணி நகரில் உள்ள 40 அடி சாலையில் (போலீஸ் பூத் அருகே) உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருக்கிறது. ஆபத்தான முறையில் இருக்கும் மின்கம்பம் உடைந்து கீழே விழுந்து அசம்பாவிதம் ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து , சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.