மடிப்பாக்கம் ராஜலட்சுமி நகரில் கோவிந்தராஜூலு தெருவில் உள்ள தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் மாலை நேரத்தில் கூட அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் பெண்கள் இருட்டில் கடைகளுக்கு செல்வதற்கு கூட அச்சப்படுகிறார்கள். எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து எரியாத தெருவிளக்குகள் மீண்டும் எரிவதற்கு வழி செய்ய வேண்டும்.