திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி, ஸ்டேட் பேங்க் மெயின் ரோட்டில் இருந்து ராஜம்மாள் வித்யாலயா பள்ளி வரையில் உள்ள சாலை பயங்கரமான பள்ளங்களுடன் காணப்படுகிறது. பல வருடங்களாகவே இதே நிலையில் இருப்பதால் இந்த சாலையில் பயணம் என்பது ஆபத்து நிறைந்ததாகவே இருக்கிறது. பள்ளி குழந்தைகளுடன் வாகனங்களில் செல்பவர்கள் மழை காலத்தில் விபத்தில் சிக்கும் சம்பவஙகளும் நிகழ்கின்றன. சாலை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?