திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு, அடிக்கல்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வந்தது. பள்ளிக்கட்டிடம் சேதமடைந்ததால் கடந்த மார்ச் மாதம் பள்ளி கட்டிடத்தை மாவட்ட நிர்வாகம் இடித்து தள்ளியது. தற்போது வாடகை வீட்டில் இயங்கி வரும் அரசு துவக்கப் பள்ளியில், குழந்தைகளுக்கு கழிப்பறை வசதிகள் கூட ஏற்படுத்திதரவில்லை. மாணவர்களின் நலன் கருதி புதிய கட்டிடம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.