மின் இணைப்பு பெட்டி சரி செய்யப்பட்டது

Update: 2022-09-19 15:05 GMT

சென்னை வடபெரும்பாக்கம் மாதவரம்-செங்குன்றம் சாலையில் உள்ள ஸ்ரீ ரங்கா கூட்டுறவு நகர் பகுதியில் உள்ள மின் இணைப்பு பெட்டி ஆபத்தான நிலையில் இருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்ததில் மின் இணைப்பு பெட்டியானது மீண்டும் பொலிவடைந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த நிர்வாகத்துக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்