காஞ்சீபுரம் மாவட்டம் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து வேலப்பன் சாவடி செல்லும் சாலையில் தனியார் மருத்துவமனை பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்திலிருந்து எதிரில் இருக்கும் சாலையை பொதுமக்கள் கடந்து செல்லும் போது வாகனங்கள் வேகமாக வருகின்றன. இதனால் விபத்து ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது. எனவே இந்த பகுதியில் போக்குவரத்து காவலரை நியமிக்க நடவடிக்கை தேவை.