காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த குமணன் சாவடி பஸ் நிறுத்தம் குப்பைகள் நிறைந்து அசுத்தமாக காணப்படுகிறது. மேலும் சிலர் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் அமரும் இருக்கைகளில் அமர்ந்து உணவு அருந்துவதால் அந்த இடத்தில் உணவு பதார்த்தங்கள் சிதறி கிடக்கிறது. இதனால் பஸ் நிறுத்தத்தில் அமரவே முடியாதபடி துர்நாற்றம் வீசுகிறது. எனவே பஸ் நிறுத்தத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை தேவை.