தாம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். இந்த ரெயில்கள் அனைத்தும் 8 மற்றும் 9-வது பிளாட்பாரங்களிலிருந்து இயக்கப்படுகிறது. இந்த ரெயில்களில் ஏறுவதற்காக செல்லும் பயணிகள் குறிப்பிட்ட நடைமேடைக்கு செல்வதற்கு ஒரே ஒரு நடை மேம்பாலம் மட்டுமே இருக்கிறது. விரைவு ரெயில்களில் செல்பவர்களும், சாதாரண ரெயில்களில் செல்பவர்களும் இதனை பயன்படுத்தி வருவதால் கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது. மேலும் கூட்ட நெரிசல் காரணமாக பலர் ரெயில்களை கொட்டை விடும் சம்பவங்கள் தினசரி நடக்கிறது. எனவே கூடுதலாக நடை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை தேவை.