காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரிலிருந்து போரூர் செல்லும் சாலையில் கோவூர் அருகே தனியார் பள்ளி இருக்கும் சாலையில் வேகத்தடை வேண்டும். இந்த பகுதியில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், குழந்தைகள் நடந்து செல்லும் சாலையில் வாகனங்கள் வேகமாக வருகின்றன. எனவே சாலையில் சீரான இடைவெளியில் வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை தேவை.