வாலாஜாபாத் அடுத்த அவளூர் நெய்குப்பம் கிராமத்தில் உள்ள சாலை ஓர பகுதிகளில் செடிகள் முளைத்தும், புதர்கள் மண்டியும் காணப்படுகிறது. இதனால் இரவு வேளைகளில் பாம்பு, விஷ பூச்சுகள் உலாவும் சூழல் அமைகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சாலை ஓர பகுதிகளில் உள்ள செடி கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
