தாம்பரம் ரெயில்நிலையத்தில் பயனிகள் வசதிக்காக ஆவின் பால் பூத் ஒன்று செயல்பட்டு வந்தது. இதன் மூலம் வெகுதூரம் பயணம் செய்பவர்கள் பயனடைந்து வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாகவே இந்த பால் பூத்தானது பூட்டிய நிலையில் காணப்படுகிறது. பயணிகள் நலன் கருதி பூட்டப்பட்ட ஆவின் பால்பூத்தை மீண்டும் திறக்க சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.