தாம்பரம் ரெயில் நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடப்பதற்காக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் நகரும் படிகட்டுகளில்(எஸ்கலேட்டர்) செல்ல முடியாத மாற்று திறனாளிகள் கம்பியை பிடித்து ஏற்வதற்காக வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. ஆனால் இரு புறமும் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்திருப்பதால் மாற்று திறனாளிகள் பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.