தாம்பரம் மாடம்பாக்கம் பகுதியில் உள்ள சாலைகளில் கால்நடைகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. தினமும் கால்நடைகள் இந்த சாலையில் படுத்துறங்குவதும், சாலையில் அன்ன நடை போடுவதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சாலையில் திரியும் கால்நடைகள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி விபத்துக்கள் ஏற்படும் முன்பு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.