தாம்பரம் மாடம்பாக்கம்அண்ணா நகர் முதல் பிரதான சாலையில் உள்ள தெருவிளக்கு நீண்ட நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த பகுதியை கடந்து செல்லும் மக்கள் அச்சத்துடனே பயணம் செய்து வருகிறார்கள். மேலும் திருட்டு சம்பவங்களும் அதிகமாக அரங்கேறுவதால் விரைவில் தெருவிளக்கு எரிவதற்கு மின்சார வாரியம் வழி செய்ய வேண்டும்.