திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டியில் பல நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகள் குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே ஆஸ்பத்திரியில் உள்ள குடிநீர் தொட்டியில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை தேவை.