பெங்களூரு ஹர்லூர் ஏரி பகுதியில் சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையில் உள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், அந்த ஜல்லி கற்களால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையை சீரமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.