காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த குமணன்சாவடியிலிருந்து சவீதா பஸ் நிறுத்தம் செல்லும் சாலையில் உள்ள மின் இணைப்பு பெட்டி சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த மின் இணைப்பு பெட்டி உடைந்து கீழே விழுந்துவிட்டதால் அபாயம் ஏற்படுமோ என்று அச்சமாக இருக்கிறது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் இணைப்பு பெட்டியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.