காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சிங்காடிவாக்கம், மதுரா மேட்டூர் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை தொட்டி மிகவும் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளது. இதுவரை தொட்டியில் குடிநீர் நிரப்பப்படவுமில்லை, மேலும் அதற்கு முன்பே ஆங்காங்கே இடிந்து விழும் சூழலில் இருக்கிறது.இதே ஆண்டு கட்டப்பட்ட மற்றொரு கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி சீராக கட்டப்பட்டுள்ளது. எங்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?