செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இருந்து கொட்டமேடு நோக்கி செல்லும் சாலையில் நந்திவரம் மலைமேடு அருகே சாலையின் நடுவே தூண் கட்டப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக பகல் மற்றும் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அந்த எல்லை தூண் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் சம்பவங்கள் நிகழ்கின்றன. எனவே சாலை நடுவே உள்ள தூணை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.