திறக்கப்படாத கழிப்பறை

Update: 2022-09-17 14:36 GMT

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஓரத்தி பஸ் நிலையம் அருகே புதிதாக கட்டபட்ட கழிப்பறை இன்னும் திறக்கப்படாமலே உள்ளது. ஒரத்தி பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பொதுமக்கள் உடல் உபாதையை கழிக்க கழிப்பறை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதியுறும் சூழல் நிலவுகிறது. எனவே பயணிகளின் கோரிக்கையை ஏற்று புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்